ETV Bharat / state

மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்..! - signal issues on online class

கொடைக்கானலில் பள்ளி மாணவர்களை தேடி, வீட்டிற்கே சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

சிக்னலால் ஆன்லைன் வகுப்பே சவால்  வீட்டுக்கே சென்ற ஆசிரியர்கள்  மக்களிடையே நல்ல வரவேற்பு  ஆன்லைன் வகுப்பு  கொடைக்கானலில் வீட்டிற்கே சென்று பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்  வீட்டிற்கே சென்று பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்  ஆசிரியர்கள்  திண்டுக்கல் செய்திகள்  dindigul news  dindigul latest news  dindigul kodaikanal school teacher news  school teacher  kodaikanal teachers conduct class by going to students house  teachers conduct class by going to students house  kodaikanal teachers going to students house and conduct class  teachers going to students house and conduct class  teachers  students  மாணவர்கள்  online class  signal issues on online class  cell phone signal issue
தேடி வந்து பாடம் நடத்தும் ஆசிரியர்கள்
author img

By

Published : Aug 10, 2021, 10:03 PM IST

திண்டுக்கல்: கரோனா பெருந்தொற்று காரணாமக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கொடைக்கானலிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிக்னலால் ஆன்லைன் வகுப்பே சவால்

கொடைக்கானலில் இருக்கக்கூடிய பல்வேறு மலை கிராமங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைன் வகுப்பு என்பது மிகவும் சவாலாகவே இருந்து வருகிறது.

இதனால் மாணவர்களுக்கு, படிப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் மாணவர்கள் தங்களது பள்ளிப்படிப்பை மறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு முறையான தமிழ் கூட தெரியாத நிலை நீடித்து வருவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் கொடைக்கானல் ஆசிரியர்கள் சேர்ந்து, கொடைக்கானல் நகர் பகுதியில் இருக்கக்கூடிய, அரசு உதவி பெற்று திகழ்ந்து வரக்கூடிய, பாக்கிய புரம் சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியில் புதுவித முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

வீட்டுக்கே செல்லும் ஆசிரியர்கள்

அதாவது அங்கு இருக்கக்கூடிய ஆசிரியர்கள், அந்த பள்ளியில் படிக்க கூடிய மாணவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று பாடங்களை எடுத்து வருகிறார்கள்.

ஒரு சில பகுதியில் மாணவர்களை ஒரே இடத்தில் கூடச் செய்து, பாதுகாப்பு நெறிமுறைகளான முகக்கவசம், தகுந்த இடைவெளியுடன் ஆசிரியர்கள் பாடங்களையும் கற்பித்து வருகிறார்கள்.

ஆன்லைன் வகுப்புகள் இல்லாமல், தற்போது நேரடியாக ஆசிரியர்களே சென்று பாடங்கள் நடத்துவதால், பாடங்களை கற்பதில் மிகவும் எளிதாக இருப்பதாக பள்ளியில் பயிலும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களிடையே நல்ல வரவேற்பு

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்களை சந்தித்து பாடங்களை கற்றுக் கொடுப்பது மனநிறைவு தருவதாக ஆசிரியர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

சமவெளியை பொறுத்தவரையில் ஆன்லைன் வகுப்புகள் எளிதாக இருந்தாலும், மலைப்பகுதி பொறுத்தவரையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு என்பது மிக சிரமமான ஒன்றாகும். இதனால் தற்போது ஆசிரியர்கள் எடுத்து இருக்கக்கூடிய இந்த முயற்சி பலர் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதேபோல் தகுந்த இடைவெளி உடன் அரசு பள்ளி ஆசிரியர்கள் நேரடியாக மலை கிராமங்களுக்கு சென்று மாணவர்களுக்கு கல்வி பயில செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதே அனைவருடைய கருத்தாக இருக்கிறது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை துணைவேந்தராக ஆர். வேல்ராஜ் நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.