திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் மாரிமுத்து. கரோனா ஊரடங்கு காரணமாக தற்போது ஆன்லைன் மூலம் பள்ளி படிப்பைத் தொடர்ந்து வருகிறார்.
ஊரடங்கு காரணமாக பள்ளி மாணாக்கர்கள் செல்போன், டிவிகளைப் பார்த்து பொழுதைக் களித்து வருகின்றனர். இதற்கு மாற்றாக மாணவர் மாரிமுத்து, ஓவியங்கள் வரைந்து தன்னை மெருகேற்றிக்கொண்டு வருகிறார்.
தன் சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் கொண்ட மாரிமுத்து கரோனா ஊரடங்கில் படிப்பைத் தொடர்ந்து பயனுள்ளதாக இருக்க நினைத்த தினசரி ஓவியங்களை வரைந்து வருகிறார்.
ஊரடங்கைப் பயனுள்ளதாகப் பயன்படுத்தும் மாணவர்:
இதில் பல்வேறு முக்கியத் தலைவர்களின் படம், கடவுள்களின் இயற்கை எழில் காட்சிகள், நடிகர்களின் உருவப்படம், விலங்குகள், பறவைகள் போன்றவற்றை வாட்டர் கலர், பென்சில்கள் மூலம் தத்ரூபமாக வரைகிறார்.
ஆன்லைன் வகுப்பை முடித்தபிறகு, ஓவியத்தில் உலக கின்னஸ் சாதனை பெற வேண்டுமென முயற்சி செய்து வருவதாக மாணவர் மாரிமுத்து தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு அரசு ஓவியக் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனைக்கு கரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்