திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான ரோஜா தோட்டம் அமைந்துள்ளது.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
தொடர்ந்து ரோஜா தோட்டத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பூ அதிக அளவில் பூத்துக் குலுங்குகிறது. இந்த ரோஜா மலர்களைக் காண சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி ரசிக்க ஆள் இல்லாமல் வெறிசோடிக் காணப்படுகிறது.
மேலும் அவ்வப்போது பெய்யும் மழையால் பூ அழுகியும் கருகியும் வருகிறது. சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி மக்கள் ஏமாறுவதுடன் ரோஜா மலர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளன.
இதையும் படிங்க: சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஜப்பான் மர ரோஜா!