திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. விவசாய பயிர்களான கேரட், பீன்ஸ், அவரை, உருளைகிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். கொடைக்கானல் மலைப் பகுதி முழுவதும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் அளவில் விவசாயம் செய்து தங்களின் வாழ்க்கையை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா பெருந்தொற்றின் காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். தொடர்ந்து தாங்கள் விளைவித்த விளைப்பொருள்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் இருந்து வந்தனர். தற்போது தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்தாலும் எந்த பயனுமில்லை. மேலும் விவசாய பொருள்களின் விளைச்சல் அதிகரித்தாலும், விலை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு 1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் போடப்பட்ட விவசாய வருமானவரி 2005-ஆம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது.
1995 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டுவரை உள்ள நிலுவை ரூபாய் 45 லட்சம் தொகையை கட்ட வேண்டுமெனவும், இதனை வசூலிக்க வருவாய் துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் தங்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து பாரதிய கிசான் சங்கம் சார்பில் விவசாயத்திற்கு வருமான வரி வசூலிப்பதை உடனே நிறுத்த வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அபராதத் தொகையை செலுத்திய சசிகலா - விரைவில் விடுதலையாக வாய்ப்பு