கொடைக்கானல் அருகே பழனி செல்ல கூடிய வெள்ளைப்பாறை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தப் பகுதியே வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 57 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் தனியார் கடன் வழங்கும் நிதி நிறுவனத்தின் பணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, உரிய ஆவணங்களை காண்பித்த பிறகு பணத்தை பெற்று செல்ல அலுவலர்கல் அறிவுறுத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் தடை; ஆ.ராசா கோரிக்கை நிராகரிப்பு!