ETV Bharat / state

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை திமுக சிந்திக்க வேண்டும் - கார்த்தி சிதம்பரம்

திண்டுக்கல்: வேலூர் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி குறித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சிந்தித்து பார்க்க வேண்டும் என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

karti chidambaram
author img

By

Published : Aug 14, 2019, 2:21 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வந்திருந்தார். அங்கு அவர் மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியையடுத்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். பின் செய்தியாளர்களை சந்தித்தபோது,

சிலைக்கடத்தல் வழக்கில் தமிழ்நாடு அரசு மீதான பொன்.மாணிக்கவேலின் குற்றச்சாட்டு தொடர்பாக அரசுதான் விளக்கம் தர வேண்டும். நீதிமன்றம் தலையிட்டு பொன்.மாணிக்கவேலுக்கு அரசு ஒத்துழைப்பு தருவதை உறுதி செய்ய வேண்டும். பழனி மலைக்கோயில் சிலை தொடர்பாக மக்கள் மத்தியில் நீண்டநாட்களாக சந்தேகம் உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறநிலையத்துறை விளக்கமளிக்க வேண்டும். விளக்கமளிக்காவிட்டால் இதுபோன்ற வாதங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம்

ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. ஆனால் இந்த தேர்தல் நடந்து முடிந்த சில மாதங்களிலேயே நடைபெற்ற வேலூர் மக்களவைத் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே இது குறித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம் என தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருகிறது என குறிப்பிட்ட அவர் தற்போது உள்ள மாநில அரசுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை என சாடினார்.

காங்கிரஸ் கட்சிக்கு தற்போது சவாலான சூழல் ஏற்பட்டுள்ள சமயத்தில் சோனியா காந்தி தலைமை பதவியை ஏற்றிருப்பது தான் உகந்த செயல். மாநில உரிமைகளை பறித்து, முரட்டு பலத்துடன் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பாஜக அரசு 144 தடை, தகவல்தொடர்பு துண்டிப்பு, பக்ரீத் கொண்டாட முடியாத நிலை என காஷ்மீரில் இக்கட்டான சூழ்நிலைகளை உருவாக்கி ஜனநாயகத்தின் குரல்வளையை மத்திய அரசு நெறித்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

Intro:திண்டுக்கல் பதிலி செய்தியாளர் எம்.பூபதி

தமிழக அரசிற்கு மக்கள் செல்வாக்கு இல்லையென சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பேட்டி :கார்த்திக்சிதபரம்Body:திண்டுக்கல். 14.08.19
பதிலி செய்தியாளர்.எம்.பூபதி

தமிழக அரசிற்கு மக்கள் செல்வாக்கு இல்லையென சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு வருகைதந்த ப.சிதம்பரம் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து பழநி கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியதாகவும்,
பழநி கோயில் சிலை விவகாரம் மற்றும் தமிழக அரசு மீதான பொன்மாணிக்கவேலின் குற்றச்சாட்டு தொடர்பாக அரசுதான் விளக்கம் தர வேண்டும். நீதிமன்றம் தலையிட்டு பொன்மாணிக்கவேலுக்கு அரசு ஒத்துழைப்பு தருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், நீண்டநாட்களாக பழநி கோயில் சிலை தொடர்பான சந்தேகம் மக்கள் மத்தியில் இருந்து கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறநிலையத்துறை விளக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். விளக்கமளிக்காவிட்டால் இதுபோன்ற வாதங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்றும்,
லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சில மாதங்களிலேயே வேலூர் இடைத்தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி குறித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம் இது என்றும்,
முதல்கட்ட அரசாங்கமான உள்ளாட்சி தேர்தலை உடனடியாக தமிழக அரசு நடத்த வேண்டும் என்றும், ஏதாவது காரணம் கூறி தமிழக அரசு தள்ளிப்போட்டுக் கொண்டே போகிறது. தைரியம் இருந்தால் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்றும், தமிழக அரசு மக்கள் செல்வாக்கு இல்லாத அரசு என்றும் விமர்சித்தார். சரித்திர விபத்தால் இந்த அரசு நீடிப்பதாகவும், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆட்சியை கலைத்து விட்டு, தேர்தலை சந்தித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு தற்போது சவாலான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றும், தனிநபர் சுதந்திரத்தை பறித்து, மாநில உரிமைகளை பறித்து, முரட்டு பலத்துடன் பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சோனியாகாந்தி தலைமை பதவியை ஏற்றிருப்பது உகந்த செயல்தான் என்றும் தெரிவித்தார்.
காஷ்மீர் செல்லும் தலைவர்களையெல்லாம் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பிவிட்டு, காஷ்மீரின் 3 முதல்வர்களை அடைத்து வைத்து அவர்களின் நிலை என்ன என்பதை தெரிவிக்காமல், 144 தடை, தகவல்தொடர்பு துண்டிப்பு, பக்ரீத் கொண்டாட முடியாத நிலையை ஏற்படுத்தி ஜனநாயகத்தின் குரல்வளையை மத்திய அரசு நெறித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், காஷ்மீரில் இயல்புநிலை நிலவுகிறது என்று காஷ்மீர் ஆளுநர் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றும், இது முழுக்க முழுக்க ஜனநாயக படுகொலை. சர்வாதிகார ஆட்சி நடக்கிறது என்றும் கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டினார். அமைச்சரை நீக்கியதற்கு பதிலாக தமிழக முதல்வர் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்திருக்க வேண்டும் என்றும் கூறினார். பேட்டியின்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ தண்டபாணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பேட்டி :கார்த்திக்சிதபரம்Conclusion:திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு வருகைதந்த ப.சிதம்பரம் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

குறித்த செய்தி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.