திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மஞ்சநாயக்கன்பட்டி ஸ்ரீமந்தை முத்தாலம்மன் கோயிலுக்குச் சொந்தமான காளை வயது முதிர்வால் இன்று (ஜூலை 17) இறந்தது. இந்தக் காளை விழாக் காலங்களில் பல ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்று பல பரிசுப் பொருள்களை வென்றுள்ளது.
தங்கள் ஊரில் ஒரு நபராக வாழ்ந்து வந்த கோயில் காளை இறந்ததால், அந்த ஊரே சோகமானது. தொடர்ந்து கோயிலின் முன்பு அலங்கரிக்கப்பட்டு வைத்த காளைக்கு மேளதாளம் முழங்க பெண்கள் கும்மி அடித்து, மலர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் வைதீக முறைப்படி, சடங்குகள் செய்த ஊர் மக்கள் கோயிலுக்கு அருகிலேயே அடக்கம் செய்தனர். முன்னதாக அவர்கள் அனைவரும் கறுப்புப் பட்டை அணிந்து, தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டுக் காளைக்கு இறுதிச் சடங்கு: ஊரடங்கை மீறிய 7 பேர் கைது!