ETV Bharat / state

ஹிட்டாச்சி வாகனத்தை இயக்கும் இரண்டரை வயது சிறுவனின் செயல் ஏற்புடையதா? - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் அருகே ஹிட்டாச்சி வாகனத்தை இயக்கும் இரண்டரை வயது சிறுவனின் செயல் ஏற்புடையதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிறுவனின் செயல் ஏற்புடையதா?
சிறுவனின் செயல் ஏற்புடையதா?
author img

By

Published : Jun 19, 2022, 3:50 PM IST

Updated : Jun 19, 2022, 10:19 PM IST

திண்டுக்கல்: பழனி பைபாஸ் சாலையில் உள்ளது குட்டத்து பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர் தம்பதி தாமஸ் - ரோனி. கடந்த 2003 ஆம் ஆண்டு தாமஸ் முதன்முதலாக இந்த கிராமத்தில் ஜேசிபி வாகனத்தை விலைக்கு வாங்கி விவசாய பணிகளுக்கு வாடைக்கு விட்டு வந்துள்ளார். அதன் பின்னர் ஜேசிபி, ஹிட்டாச்சி உள்ளிட்ட வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் சிறிய அளவிலான ஜேசிபி, ஹிட்டாச்சி உள்ளிட்ட விவசாய கருவிகளை தயாரிக்கும் தொழிற்சாலையினை தனது வீட்டின் அருகிலேயே ஏற்படுத்தி தயாரித்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயது மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது இரண்டரை வயது மகன் கோல்டன் ஸ்டோவின், தவழும் பொழுதிலேயே வீட்டின் சுவற்றை பிடித்துக்கொண்டு அருகில் உள்ள தனது தந்தையின் தொழிற்சாலைக்கு செல்வது வழக்கமாம்.

சிறுவனின் செயல் ஏற்புடையதா?

பின்னர் நடைபழகிய உடன் தனியாக நடந்து சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் விவசாய இயந்திரங்களில் ஏறி அமர்ந்து கொண்டு விளையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறான். ஒருகட்டத்தில் அந்த வாகனங்களை தானும் இயக்குவேன் என்று அடம் பிடிக்கவே வேறுவழியின்றி தந்தை தாமஸ் தனது மடியில் வைத்து வாகனங்களை இயக்க கற்றுக் கொடுத்துள்ளார். நாளடைவில், "இளங்கன்று பயமறியாது" என்ற பழமொழிக்கு ஏற்ப தானாகவே தள்ளாடி நடந்து சென்று தொழிற்சாலையில் நிற்கும் ஜேசிபி, ஹிட்டாச்சி வாகனங்களை இயக்க முயற்சித்துள்ளான். இதற்கு தாமஸ் பயிற்சி கொடுக்கவே தற்பொழுது தானாகவே வயல்வெளிகளில் ஹிட்டாச்சி, ஜேசிபி வாகனங்களை இயக்கும் அளவிற்கு தனது திறமையை வளர்த்துக் கொண்டுள்ளான்.

தற்பொழுது சிறுவன் தனது பிஞ்சு கைகளினால் ஹிட்டாச்சி வாகனத்தை இயக்கி லாவகமாக தன் வீட்டின் எதிர்புறம் உள்ள காலி நிலத்தை சமன் செய்து வருகிறான். இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். கோல்டு ஸ்டோவனின் பெற்றோர் கின்னஸ் சாதனையில் தனது குழந்தையை இடம்பெறச் செய்யவேண்டும் என்பதற்காக தொடர்ந்து பயிற்சி அளித்து வருவதாக தங்களது விருப்பத்தை தெரிவிக்கின்றனர்.

சுமார் இரண்டரை அடி உயரமுள்ள இந்த சிறுவன் ஹிட்டாச்சி வாகனத்தில் பிஞ்சுக் கால்களால் சிரமப்பட்டு ஏறி இறங்குவது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. இருப்பினும் ஹிட்டாச்சி வாகனத்தை இயக்கும் இரண்டரை வயது சிறுவனின் செயல் ஏற்புடையதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: அக்னிபத் திட்டம்: இளைஞர்களை ஆர்எஸ்எஸ் தொண்டர்களாக மாற்ற வாய்ப்பு - சீமான்

Last Updated : Jun 19, 2022, 10:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.