திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே உள்ள அய்யனார் நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி (50). கரூர் தாய் சேய் நல அரசு மருத்துவமனையில் செவிலியாக பணியாற்றுகிறார்.
இவர் வீட்டிலேயே கோவாக்சின் தடுப்பூசிகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக, சுகாதாரத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வீட்டில் பதுக்கப்பட்டிருந்த தடுப்பூசிகள் பறிமுதல்
இதனையடுத்து வேடசந்தூர் வட்டார மருத்துவர் பொன். மகேஸ்வரி தலைமையிலான சுகாதாரத் துறையினர், செவிலி தனலட்சுமியின் வீட்டில் இன்று (ஜூலை 25) சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் சுகாதாரத் துறையினரால் கைப்பற்றப்பட்டன. இது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பல ஆண்டுகள் கழித்தும் நடவடிக்கை இல்லை - எஸ்பியிடம் புகார்