தற்போது இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவருகிறது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். விலை உயர்வைக் கண்டித்துப் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
மேலும் கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை பகுதி மக்கள் இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து ஒப்பாரிவைத்து அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மத்திய, மாநில அரசுகள் உடனே பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டுமென கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! - தமிழக அரசு அறிவிப்பு!