ETV Bharat / state

தடை செய்யப்பட்ட PFI நிர்வாகி பழனியில் கைது; என்ஐஏ 2-வது நாளாக விசாரணை - Coimbatore cylinder blast

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் (Banned PFI) மதுரை மண்டலத் தலைவர் முகமது கைசர் என்பவரிடம் பழனியில் என்ஐஏ அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 17, 2023, 5:51 PM IST

தடை செய்யப்பட்ட PFI நிர்வாகி பழனியில் கைது; என்ஐஏ 2-வது நாளாக விசாரணை

திண்டுக்கல் மாவட்டம், பழனி திருநகரைச் சேர்ந்தவர், முகமது கைசர்(50). இவர் பழனியில் டீக்கடை நடத்தி வருகிறார். இதனிடையே, இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (Popular Front of India - PFI) மதுரை மண்டலத் தலைவராக உள்ளார்.

இந்நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் பழனி காந்திரோடு பகுதியில் உள்ள டீக்கடையில் இருந்த முகமது கைசரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். மேற்படி விசாரணைக்காக அவரை பழனி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும், அங்குள்ள போக்குவரத்து காவல்நிலைய அலுவலகத்தில் வைத்து, அவரிடம் டெல்லியில் இருந்து வந்துள்ள 5 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை, கோவை சிலிண்டர் வெடிப்பு, கர்நாடக மாநிலத்தில் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் பலரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தற்போது, பழனியைச் சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசரை, என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (ஜன.17) விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் SDPI கட்சியின் சார்பில் பழனி சட்டமன்றத் தொகுதி சார்பில் வேட்பாளராக நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கேரளா: பி.எஃப்.ஐ. தொடர்புடைய 56 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை: கிடைத்தது முக்கிய க்ளூ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.