ETV Bharat / state

கொடைக்கானல் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து பாதிப்பு!

author img

By

Published : Dec 25, 2020, 4:28 PM IST

திண்டுக்கல்: கிறிஸ்தும‌ஸ் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கான‌லில் குவிந்த‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளின் வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொண்டாட்டத்தில் கொடைக்கானல் : போக்குவரத்து பாதிப்பு!

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் மோயர் பாய்ண்ட், தூண்பாறை, குணாகுகை, பைன்பாரஸ்ட், கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. அதுமட்டுமின்றி, இயற்கையாகவே அமைந்துள்ள பசுமை காடுகள், மரங்கள், பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும்.

இதனைக் காண பல மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். அதன்படி தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை என தொடர் விடுமுறை உள்ளதால், பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

கொடைக்கானல் குவிந்த சுற்றுலா பயணிகள் : போக்குவரத்து பாதிப்பு!

சுற்றுலாப்பயணிகள் வரும் வாகனங்கள் செல்ல இடமில்லாமலும், வாகனத்தை நிறுத்த இடமில்லாமலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சி, முஞ்சிக்கல், அண்ணாசாலை, செவன்ரோடு, எரிச்சாலை ஆகிய இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் சுற்றுலாப்பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.

இதையும் படிங்க...நீட் போலி சான்றிதழ் விவகாரம் : மருத்துவர் வீட்டில் மூன்றாவது முறையாக ஒட்டப்பட்ட சம்மன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.