தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட வடகாடு வாக்குச்சாவடி மையத்தில் அனைத்து கட்சியைச் சேர்ந்த முகவர்கள் பணியாற்றி வந்தனர்.
அங்கு அதிமுக சார்பில் தேர்தலுக்கான முகவர் ஜெகன்குமார் என்பவரும் பணியில் இருந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் பணியாற்றிவந்தார். திமுகவிலிருந்து விலகி வந்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்ட அவர், இந்த தேர்தலில் அதிமுக சார்பில் முகவராக காலை முதல் பணியாற்றினார்.
அவரை முன்விரோதம் காரணமாக திமுகவைச் சேர்ந்த திருமலைசாமி என்பவர் ஜெகன்குமாரை தாக்கிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த ஜெகன்குமார் ஒட்டன்சத்திரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படியுங்க: 'சாலை வசதி செய்துதரவில்லை' - கறுப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு!