திண்டுக்கல்: நத்தம் சுற்றுவட்டாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் உழவர்கள் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர். தொடர் மழை, மாமரங்களின் பூக்களில் நோய்த் தாக்குதலால் மாவடு எடுப்பதற்கு முன்பாகவே பூக்கள் உதிர்ந்து வெற்று மரங்களாக காணப்படுகின்றன.
தற்போது மாங்காய்க்கு விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் உழவர்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர். இதனால் உழவர்கள் வேதனையில் உள்ளனர்.
மாவடு காய்க்கும் நேரத்தில் மரங்களில் செல் நோய், தேன் நோய், பூக்களில் புழுக்கள் என மாறி, மாறி நோய்த் தாக்கியதாலும் கடந்த சில நாள்களாகப் பலத்த காற்றுடன் பெய்த சாரல் மழையினாலும் மரத்திலிருந்து பூக்கள் மொத்தமாக உதிர்ந்துவிட்டன. தற்போது பூக்கள் இன்றியும், மாவடு இன்றியும் மரங்கள் காணப்படுகின்றன.
மேலும் கரோனா பாதிப்பு நேரம், ஊரடங்கு போன்ற காரணத்தால் வியாபாரிகள் வருவது சற்று குறைந்துள்ளது. மேலும், உழவர்களால் சந்தை சென்று காய்களை விற்பனை செய்யவும் தடையாக உள்ளது.
எனவே பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நத்தம் பகுதி உழவர்கள் அரசுக்கு கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான தீரா வன்கொடுமை: அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!