ETV Bharat / state

'கமிஷன் புரோக்கர் போல, காசுக்காக எதையும் செய்யும் எடப்பாடி' - திமுக துணைப் பொதுச்செயலாளர் பெரியசாமி - DMK protest in Dindigul condemning the Citizenship Amendment Act

திண்டுக்கல்: குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் இஸ்லாமிய மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன என்றும் எடப்பாடி பழனிசாமி, கமிஷன் புரோக்கர் போல காசுக்காக எதையும் செய்யும் முதலமைச்சராக உள்ளார் என்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் பெரியசாமி பேசியுள்ளார்.

திமுக துணை பொதுசெயலாளர் ஐ. பெரியசாமி பேட்டி
திமுக துணை பொதுசெயலாளர் ஐ. பெரியசாமி பேட்டி
author img

By

Published : Dec 18, 2019, 11:36 AM IST

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மாணவர்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளாமனோர் கலந்து கொண்டனர்.

இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஐ.பெரியசாமி, "மத்திய அரசு இந்தியாவின் மதச்சார்பின்மையை கலைத்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமிய மதத்தினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்தியாவின் தேசிய கீதம் கூட ஒற்றை மொழியில் அமைக்கப்படவில்லை. ஆனால், தற்போது ஒற்றை மொழி, ஒற்றை மதம் என மாற்றிட பாஜக நினைக்கிறது" என்றார்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி பேட்டி

மேலும், "நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலாக திமுகவினர் மட்டுமே உள்ளனர். தொடர்ந்து திமுகவினர் தமிழ்நாடு மக்களின் நலனுக்காக பேசும்போது அதிமுக எம்.பி., ரவீந்திரநாத் மட்டும் மோடி புகழைப் பாடுகிறார். மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமி, கமிஷன் புரோக்கர் போல காசுக்காக எதையும் செய்யும் முதலமைச்சராக உள்ளார்" என்று கூறினார். முன்னதாக பேசிய ஐ.லியோனி அதிமுகவை அமித்ஷா திராவிட முன்னேற்றக் கழகம் என்று விமர்சித்தார்.

இதையும் படிங்க:

இந்தியாவை பிளவுபடுத்த பாஜக முயல்கிறது: ஆ.ராசா!

Intro:திண்டுக்கல் 17.12.19

குடியுரிமை சட்டத்தினால் இஸ்லாமிய மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது : ஐ. பெரியசாமி சாடல்

Body:நாடு முழுவதும் குடியுரிமை சட்டம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் குடியுரிமை சட்ட நிறைவேற்றத்தை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பேசிய ஐ.பெரியசாமி, மத்திய அரசு இந்தியாவின் மதச்சார்பின்மையை குழைத்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமிய மதத்தினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்தியாவின் தேசிய கீதம் கூட ஒற்றை மொழியில் அமைக்கப்படவில்லை. ஆனால் இன்று ஒற்றை மொழி ஒற்றை மதம் என மாற்றிட பாஜக விளைகிறது.

மேலும், தமிழக அரசு பாஜகவின் அடிமையாக செயல்படுகிறது. பாராளுமன்றத்தில் தமிழகத்தின் குரலாக திமுகவினர் மட்டுமே உள்ளனர். தொடர்ந்து திமுகவினர் தமிழக மக்களின் நலனுக்காக பேசும்போது அதிமுக எம்.பி ரவீந்திரநாத் மட்டும் மோடி புகழை பாடுகிறார். மொத்தத்தில் எடப்பாடி கமிஷன் புரோக்கர் போல காசுக்காக எதையும் செய்யும் முதல்வராக உள்ளார் என கூறினார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.