ETV Bharat / state

சாதியைக் காரணம் காட்டி விட்டுச்சென்ற கணவர் - நடவடிக்கை எடுக்க மனு அளித்த இளம்பெண்!

திண்டுக்கல்: சாதியைக் காரணம் காட்டி, தன்னை விட்டுச்சென்ற கணவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதியை காரணம் காட்டி விட்டுச்சென்ற கணவர்
author img

By

Published : Sep 30, 2019, 8:28 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்த பிரியங்காவை காதலிப்பதாக, அந்த மில் பேருந்து ஓட்டுநர் ரவிக்குமார் என்பவர் கூறியுள்ளார்.

இதையடுத்து அப்பெண்னை பலமுறை உடல்ரீதியாக பயன்படுத்திக்கொண்ட ரவிக்குமார் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இருப்பினும் அப்பெண்ணின் வற்புறுத்தலையடுத்து சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பாக தாடிக்கொம்பிலுள்ள பெருமாள் கோயிலில் உறவினர்கள் இன்றி ரவிக்குமார் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அதன் பின்னர் தாடிக்கொம்பிலேயே வாடகை வீட்டில் இருவரும் வாழ்ந்து வந்தனர். திருமணம் ஆனாலும், தாழ்ந்த சாதியைச் சேர்ந்த பெண்ணை தன் குடும்பம் ஏற்றுக்கொள்ளாது என்று கூறி பலமுறை மனைவியிடம் சண்டை போட்டுள்ளார், ரவிக்குமார். இதனிடையே ஆறு மாதங்களுக்கு முன்பாக வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற ரவிக்குமார், ஆண் குழந்தை பிறந்த போது கூட பார்ப்பதற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரியங்கா காவல் துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே ஏமாற்றிச் சென்ற கணவர் ரவிக்குமார், அவரது தந்தை ரெங்கசாமி, தாய் பழனியம்மாள் ஆகியோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளம்பெண் பிரியங்கா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இதையும் படிங்க: குஜராத் கலவர வழக்கு; நீதி நிலைநாட்டப்பட்டது!

Intro:திண்டுக்கல் 30.9.19

ஜாதி பெயரை கூறி தன்னை விட்டுச்சென்ற கணவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் மனு.

Body:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில்
நூற்றுக்கணக்கான இயங்கி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான உள்ளுர் மற்றும் வெளியூர் மக்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் வேதா ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்த பிரியங்கா என்ற பெண்ணை காதலிப்பதாக மில் பேருந்தில் ஓட்டுநராக இருந்த ரவிக்குமார் கூறியுள்ளார். இதையடுத்து பிரியங்காவை பலமுறை உடல்ரீதியாக பயன்படுத்தி கொண்டு ரவிக்குமார் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இருப்பினும் பிரியங்காவின் வற்புறுத்திதையடுத்து சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பாக தாடிக்கொம்பில் உள்ள பெருமாள் கோயில் உறவினர்கள் இன்றி தாங்களாகவே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் தாடிக்கொம்புவிலேயே வாடகை வீடு பிடித்து இருவரும் வாழ்ந்து வந்தனர். பிரியங்காவை திருமணம் செய்து கொண்டாலும் தான் உயர்ந்த சாதி என்பதால் தாழ்ந்த ஜாதியை சேர்ந்த உன்னை என் குடும்பம் ஏற்றுக் கொள்ளாது என்று கூறி பலமுறை சண்டை போட்டுள்ளார். இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ரவிக்குமார் ஆண் குழந்தை பிறந்த போது கூட பார்ப்பதற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய பிரியங்கா, தாடிக்கொம்பு போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே என்னை ஏமாற்றி சென்ற கணவர் ரவிக்குமார், அவரது தந்தை ரெங்கசாமி, தாய் பழனியம்மாள் ஆகியோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எனக்கும் எனது குழந்தைக்கும் அவரது குடும்பத்தரிடமிருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.