ETV Bharat / state

பழநி கோயில் இரண்டாவது ரோப் கார் திட்டப் பணிகளில் முறைகேடு? - அறநிலையத்துறை அமைச்சர் - இந்து சமய அறநிலையத்துறை

பழநி கோயில் இரண்டாவது ரோப் கார் திட்டப்பணிகளின் தாமதம் குறித்து முன்னாள் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என இந்நாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
author img

By

Published : Jul 6, 2021, 3:39 AM IST

திண்டுக்கல்: பழநி கோவிலுக்கு வந்த தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவிலுக்கு உட்பட்ட உபகோவில்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளி ஆகியவைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பழநியில் கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பெண்களுக்கு தாலிக்கு தங்கம், புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார். பின்னர் பழநி அருள்மிகு பழநியாண்டவர்‌ கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்.

அப்போது 150 ஆண்டுகள் பழமையான பழநி தைப்பூசத்தேர் பழுது அடைந்துள்ளதை மராமத்து செய்வது, கோயில் மற்றும் கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ள தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்குவது, பழநியாண்டவர் கல்லூரியை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்துவது, பள்ளி மற்றும் கல்லூரிகளை மேம்படுத்துவது ஆகியவை குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, "பழநியை திருப்பதி போல தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துவதற்கு கட்டணம் இல்லாமல் இலவசமாக இருப்பது போல் பழநியிலும் மாற்ற முதலமைச்சருடன் ‌ கலந்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

பழநியில் சித்தா கல்லூரி விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பழநிகோயிலில் குடமுழுக்கு விரைவில் நடத்தப்படும். ஒட்டன்சத்திரம் பகுதியில் கலைக்கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரி ஆகியவை அமைக்க முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பழநி மலைக்கோவில் இரண்டாவது உட்கார் பணியை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும். 2017 ஆம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்ட இரண்டாவது ரோப் கார் திட்டப்பணிகளை முடிக்காமல் இத்தனை ஆண்டுகள் தாமதமானதற்கு கடந்த கால ஆட்சியாளர்கள் ஏதோ எதிர்பார்ப்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளனர். 2017ஆம் ஆண்டு பூமிபூஜை போடப்பட்ட 2வது ரோப் கார் திட்டம் 18 மாதங்கள் கடந்து 2019ஆம் ஆண்டு பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பூமி பூஜை போடப்பட்டு இரண்டு ஆண்டுகள் தாமதமாக பணி ஆணை வழங்கியதற்கு என்ன காரணம் என்பதை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,அப்போதைய இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகிய மூவரும் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு

இந்நிகழ்ச்சியின் போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், பழனி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார், வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் காந்திராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.