திண்டுக்கல் மாவட்டம், பழனி ரயில் நிலைய சாலையில் மின்வாரிய அலுவலகம் முன்பு சாலையை ஆக்கிரமித்து மீன் கடைகள் செயல்பட்டு வந்தன. மீன் கடைகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்தப்புகாரைத்தொடர்ந்து பழனி நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்களிடத்தில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன மீன்கள் 500 கிலோ அளவில் கடைகளிலிருந்து கைப்பற்றப்பட்டன. மீன்களைப் பறிமுதல் செய்த சுகாதாரத்துறை அலுவலர்கள் மீன்களை வாகனங்களில் ஏற்றிச்சென்று அழித்தனர்.
மேலும் கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த மீன் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்ததுடன், நகராட்சி அனுமதியின்றி சாலையை ஆக்கிரமித்து இருந்த மீன் கடைகளையும் நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். நகராட்சி ஊழியர்களின் திடீர் நடவடிக்கையால் ரயில் நிலைய சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மளிகை கடையில் மது விற்பனை: அதிரடி சோதனையில் ஏராளமான மதுபாட்டில்கள் பறிமுதல்!