திருவாரூரில் உள்ள திருத்துறைப்பூண்டியில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலத்தைப் பாமக பிரமுகர் கவிபிரியன் துரத்திச்சென்று கத்தியால் கையில் வெட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ செய்திகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது அங்குள்ள சுகாதாரப் பணியாளர்கள் பணிக்குச் செல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், இச்சம்பவத்தைக் கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி முன்பாக, 50க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் இச்சம்பவத்திற்குக் காரணமான நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து சுகாதாரப் பணியாளர் குமார் கூறுகையில், “மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றிவரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் எவ்வாறு சுகாதார ஆய்வாளர்கள் பயமின்றி பணியினை தொடர முடியும், விரைந்து இச்சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி