ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தலைமையாசிரியர் போக்சோவில் கைது - Kanavaipatti Government School

திண்டுக்கல்: ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

headmaster
headmaster
author img

By

Published : Jan 11, 2020, 6:35 PM IST

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மார்க்கம்பட்டி அருகே கணவாய்பட்டி அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இவர் அந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த தொப்பம்பட்டி வட்டாரக் கல்வி அலுவலர் ராஜாமணி, கணவாய்பட்டியில் உள்ள ஊர் முக்கியஸ்தர்கள், பாதிக்கப்பட்ட மாணவி, மாணவியின் பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை செய்தார்.

கைது செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் முருகன்

விசாரணையைத் தொடர்ந்து காவல் துறையிடம் முருகன் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இடையகோட்டை காவல்துறையினர் தலைமையாசிரியர் முருகனை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: போக்சோவில் இதுவரை 1000 பேர் கைது - துணை ஆணையர் ஜெயலட்சுமி பேட்டி!

Intro:திண்டுக்கல் 11.01.2020
ஒட்டன்சத்திரம் அருகே அரசு பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போஸ்கோ சட்டத்தில் கைது
Body:திண்டுக்கல் 11.01.2020
எம்.பூபதி செய்தியாளர்.

ஒட்டன்சத்திரம் அருகே அரசு பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போஸ்கோ சட்டத்தில் கைது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கம்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டி அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த முருகன். இவர் அந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் தொப்பம்பட்டி வட்டாரக் கல்வி அலுவலர் ராஜாமணிக்கு தகவல் தெரிய அவர் வந்து கணவாய்பட்டியில் உள்ள ஊர் முக்கியஸ்தர்கள், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை செய்துள்ளார். விசாரணையைத் தொடர்ந்து அவர் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு துறையினர் இடையகோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த இடையகோட்டை காவல்துறையினர் தலைமையாசிரியர் முருகனை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:திண்டுக்கல் 11.01.2020

ஒட்டன்சத்திரம் அருகே அரசு பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போஸ்கோ சட்டத்தில் கைது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.