ETV Bharat / state

ஹெச்.ராஜா கைது - முழுப்பின்னணி!

author img

By

Published : May 18, 2022, 9:05 PM IST

பழனியில் அனுமதியின்றி நடக்க இருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஹெச்.ராஜா கைது செய்யப்பட்டார். அப்போது அவர் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹெச்.ராஜா கைது! போலீசாருடன் வாக்குவாதம்!

திண்டுக்கல் : பழனியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் பழனி இடும்பன் கோயில் குளக்கரையில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா மற்றும் மன்னார்குடி செண்டலங்கர ஜீயர், ஆகியோர் கலந்து கொள்ள இருந்தனர்.

இந்த நிலையில் காவல்துறை மதியம் 3 மணிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறவில்லை; நிகழ்ச்சி இரவு நேரம் நடத்தப்படுவதால் மின்சார ஏற்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை; நிகழ்ச்சிக்கு பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் வர இருப்பதால் போதிய இடவசதி இல்லை; பக்தர்கள் எத்தனை வாகனங்களில் வருகை தருவார்கள் என்ற விவரம் அளிக்கவில்லை எனக் காரணம் கூறி அனுமதி மறுத்தனர்.

மேலும் பழனி காவல் உட்கோட்டம் முழுவதும் காவல் சட்டப்பிரிவு(30)2 அமலில் இருப்பதாகக் கூறி சட்டம் ஒழுங்கு பிரச்னை, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாகக் கூறிய காவல் துறை அனுமதி மறுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜாவை, பழனி உட்கோட்ட காவல் பிரிவு எல்லை சத்திரப்பட்டியில் வைத்து திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் போலீசாருடன் ஹெச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சீருடை அணிந்திருந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசனை மரியாதைக் குறைவாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஹெச். ராஜா கைது செய்யப்பட்டதால் பழனியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : என்னை கைது செய்துவிட்டார்கள் - எச். ராஜா ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.