திண்டுக்கல்: சின்னாளபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அதிகாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் உத்தரவின் பேரில், தனிப்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பஞ்சம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் சிங்கம் பட பாணியில் வேனுக்குள் 6 அடி அளவில் ரகசிய அறை அமைத்து, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மூட்டை மூட்டையாக இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மூட்டைகளில் இருந்த 546 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அதிகாரிகள், விசாரணை நடத்தினர்.
அதில், கடத்தலில் ஈடுபட்டது சேரத்தை சேர்ந்த மணிகண்டன்(30) மற்றும் மைசூரைச் சேர்ந்த ராகேஷ்(24) என்பது தெரியவந்தது. மேலும் குட்கா பொருட்கள், பஞ்சம்பட்டி ரோஸ்பாண்டி (48) அவரது தம்பி ஜெகன் தினகரன் (45) ஆகியோரின் மளிகை கடைக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!