ETV Bharat / state

Sexual harassment: பழனியில் பள்ளிக்குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது! - Sexual harassment to school childrens in Palani

Sexual harassment: பழனியில் பள்ளிக்குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசுப்பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பழனியில் பள்ளிக்குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு: அரசுப்பள்ளி ஆசிரியர் கைது!

author img

By

Published : Dec 25, 2021, 6:39 PM IST

Sexual harassment: திண்டுக்கல்: பழனி அருகே கே.வேலூரில் இயங்கிவரும் அரசு நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் சையது அகமது ரஃபி(56) என்பவர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கல்வித்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு‌ உறுதியானது. இதனையடுத்து ஆசிரியர் சையது அகமது ரஃபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் பாலியல் தொல்லை தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஆசிரியர் சையது அகமது ரஃபியை கைது செய்தனர்.

இதையும் படிங்க: மதுரை அருகே ரூ.12 லட்சம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் பறிமுதல்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.