திண்டுக்கல்: கட்சி பிரமுகர் இல்ல விழாவிற்கு சென்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தற்பொழுது யாருடனும் கூட்டணி கிடையாது. நாங்கள் மட்டுமல்ல பாமக, தேமுதிக எந்த கட்சியும் தற்போது யாருடனும் கூட்டணி கிடையாது.
திமுக கூட்டணி என்று தமிழகத்தில் இருக்கிறது. அகில இந்திய அளவில் இந்தியா என்ற முரண்பாட்டுடைய மொத்த உருவத்திலே கூட்டணி இருக்கிறது. மற்ற கூட்டணிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. நாங்கள் ஜனவரி மாதம் தான் கூட்டணி குறித்து அறிவிப்போம்.
-
#தமிழ்மாநிலகாங்கிரஸ் எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை.
— G.K.Vasan (@GK__Vasan) November 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
எனக்கு கிடைத்த தகவல் படி மத்தியிலே #பாஜக வெற்றி பிரகாசமாக உள்ளது
தமிழகத்தில் #அதிமுக பெரிய கட்சி என நம்புகிறோம்.
அதேபோல் தேசிய அளவில் #பாஜக பெரிய கட்சி என நம்புகிறோம். #gkvasan #tamilmaanilacongress #tmc #bjp #AIADMK pic.twitter.com/nxmyaHGurm
">#தமிழ்மாநிலகாங்கிரஸ் எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை.
— G.K.Vasan (@GK__Vasan) November 23, 2023
எனக்கு கிடைத்த தகவல் படி மத்தியிலே #பாஜக வெற்றி பிரகாசமாக உள்ளது
தமிழகத்தில் #அதிமுக பெரிய கட்சி என நம்புகிறோம்.
அதேபோல் தேசிய அளவில் #பாஜக பெரிய கட்சி என நம்புகிறோம். #gkvasan #tamilmaanilacongress #tmc #bjp #AIADMK pic.twitter.com/nxmyaHGurm#தமிழ்மாநிலகாங்கிரஸ் எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை.
— G.K.Vasan (@GK__Vasan) November 23, 2023
எனக்கு கிடைத்த தகவல் படி மத்தியிலே #பாஜக வெற்றி பிரகாசமாக உள்ளது
தமிழகத்தில் #அதிமுக பெரிய கட்சி என நம்புகிறோம்.
அதேபோல் தேசிய அளவில் #பாஜக பெரிய கட்சி என நம்புகிறோம். #gkvasan #tamilmaanilacongress #tmc #bjp #AIADMK pic.twitter.com/nxmyaHGurm
தற்பொழுது நாங்கள் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் நட்பு கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். வடமாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமைப்பது தொடர்பாக ஜோசியம் சொல்ல முடியாது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்றால் சரியான வியூகம் தேவை. கட்சிகள் யார் எந்த கூட்டணியில் சேர்கிறார்கள் என்று என்னால் கணிக்க முடியாது. ஒத்த கருத்தோடு கடைப்பிடித்தால் எதிரியை வீழ்த்தலாம்" என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேகமாகப் பரவும் இன்புளூயன்சா ஃபுளூ.. இணை நோய் உள்ளவர்களுக்கு அதிக கவனம் தேவை.!