திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி கிராமம் அருகேயுள்ள, அன்னை சத்தியா காலனியை சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகள் தனுஷியா (15).
இவர், தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். கரோனா தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் ஆன்லைன் வகுப்பு பயின்ற மாணவி பாடங்கள் சரியாக புரியாத காரணத்தால் நண்பர்களுடன் செல்போனில் அதிக நேரம் பேசியுள்ளார். ஆனால் இதனை மாணவியில் பெற்றோர் தவறாக நினைத்துகொண்டு மாணவியை கண்டித்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் மாணவி நேற்றிரவு (அக்.12) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க...தொடரும் தற்கொலைகள்: ஆன்லைன் வகுப்பிற்கு செல்ஃபோன் கிடைக்காததால் மாணவி தற்கொலை