ETV Bharat / state

வரதட்சணை கொடுமை செய்ததால் பெண் தற்கொலை: கணவன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

வேடசந்தூர் அருகே வரதட்சணை கொடுமை செய்து பெண்ணை தற்கொலைக்குத் தூண்டியதாக கணவன், மாமனார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

வரதட்சனை கொடுமை செய்ததால் பெண் தற்கொலை கணவன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

author img

By

Published : May 23, 2022, 10:27 PM IST

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே உள்ள அத்திக்குளத்துப்பட்டியைச் சேர்ந்த ரைஸ் மில் உரிமையாளர், கண்ணன். இவரின் மனைவி உமாராணி(37). இவர்களுக்கு பாலகிருஷ்ணன் என்ற மகனும் பிரமிஷா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால், உமாராணி வீட்டிலிருந்து கோபித்துக்கொண்டு சென்றுள்ளார்.

அதன்பின்னர் உமாராணி நேற்று காலை வீட்டு அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் முகம், தலை துண்டான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் ரயில்வே ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உமாராணியின் உடலை மீட்டு உடற்கூராய்வு செய்ய திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உமாராணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது பெற்றோர் ரயில்வே காவல் துறையிடம் புகார் அளித்தனர். அதன்பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் உமாராணியின் கணவர் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் உமாராணியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியது தெரியவந்தது.

இதனால் மனமுடைந்த உமாராணி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கண்ணன், அவரது தந்தை திருப்பதி, தம்பிகள் நாகராஜ், பாண்டி ஆகிய 4 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கேரள விஸ்மயா வழக்கு: கணவர் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.