திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, மதுரை அழகர்கோவில் எல்லைக்குள்பட்ட லிங்கவாடி விவசாய நிலங்களிலிருந்த அரியவகை எரும்புத்தின்னிகளை கொன்று அதன் ஓடுகளை எடுத்து மருந்துகளுக்குப் பயன்படுகிறது எனக்கூறி விற்பனைக்கு கொண்டுவருவதாக மாவட்ட வன பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற வனத் துறையினர், விற்பனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட ஐந்து கிலோ எரும்புத்தின்னி ஓடுகளைக் கைப்பற்றி, அவற்றை விற்பனை செய்துவந்த அஞ்சுகுளிப்பட்டியைச் சேர்ந்த தந்தை தொத்தக்காளை, மகன் அழகு ஆகியோரை கைதுசெய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
மேலும் இவர்களுடைய கூட்டாளிகளான லிங்கவாடியைச் சேர்ந்த மெய்யன், அஞ்சுகுளிப்பட்டியைச் சேர்ந்த சங்கர் ஆகியோரை வனத் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தி, நான்கு பேரையும் ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதித் துறை நடுவர் பாண்டியன் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆட்டோ மீது டிராக்டா் மோதி இருவர் உயிரிழப்பு!