ETV Bharat / state

தைப்பூசம்: பழனி முருகன் கோயிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம்..!

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்
author img

By

Published : Feb 5, 2023, 11:43 AM IST

பழனி முருகன் கோயிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம்

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வரும் மக்கள் தமிழ் கடவுள் முருகபெருமானை வணங்கி தரிசித்து வருகின்றனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும், முடி காணிக்கை உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். மலை அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் மலைக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், அவரது சகோதரர் ராஜா மற்றும் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். வேட்பாளர் வாபஸ் வாங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அனைத்தையும் அறிக்கையாக வழங்குவதாக தெரிவித்து விட்டு ஓ.பன்னீர்செல்வம் சென்றார்.

இதையும் படிங்க: இயக்குனர் டிபி கஜேந்திரன் காலமானார்..! - கல்லூரி நண்பர் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.