திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அமைந்துள்ளது கீழ்மலைக் கிராமம் பெருமாள் மலை. கடும் வெயில் காரணமாக, இம்மலையில் காட்டுத்தீ திடீரென பற்றியுள்ளது. இதையடுத்து அத்தீயானது அருகிலுள்ள பட்டாக் காடுகள், வருவாய் நிலங்கள் ஆகியப் பகுதிகளுக்கு பரவியது.
இதனால், அப்பகுதிகளில் உள்ள மரங்கள், புதர்கள், காய்ந்த சருகுகள் தீயினால் கருகி நாசமாகின. மேலும் தொடர்ந்து காட்டுத் தீயானது வேகமாகப் பரவி வருவதால், மலைப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
பரவிய தீயானது தற்போது தலமலை, பொய்யாவெளி, மச்சூர், வடகவுஞ்சி கிழக்கு உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்குப் பரவி வருகிறது.
இத்தீயைக் கட்டுப்படுத்த 40-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் போராடி வருகின்றனர். இருப்பினும் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் சிரமம் நிலவி வருகிறது. கோடைக்காலம் என்பதால், இப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புனேவில் தீ விபத்து; 30 குடிசைகள் தீக்கிரையானது