ETV Bharat / state

கொடைக்கானலில் 2ஆம் கட்ட வன விலங்கு கணக்கெடுப்பு - சிசிடிவி பொருத்த வனத்துறை திட்டம் - 236 கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படும் என்று வனத்துறை தகவல்

கொடைக்கானலில் வனப்பகுதியில் இரண்டாம் கட்ட வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியின் ஒரு பகுதியாக, 236 கண்காணிப்புக் கேமராக்கள் பயன்படுத்தப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வனத்துறை
வனத்துறை
author img

By

Published : Jul 16, 2022, 9:09 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானலில் 7 வன சரகங்களிலும் 245 பணியாளர்கள் 3 வனவிலங்கு ஆய்வாளர்கள் ஆகியோர் முதற்கட்ட வனவிலங்குகள் கணக்கெடுக்குப்பில் ஈடுபட்டிருந்தனர். வனவிலங்குகளின் கால் தடம், வனவிலங்குகளின் எச்சம், நேரில் பார்ப்பது உள்ளிட்ட வகைகளில் இந்த முதற்கட்ட வனவிலங்குகளின் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது. இதையடுத்து இரண்டாம் கட்ட பணி வரும் வாரத்தில் தொடங்கவுள்ளது.

இதற்கான ஆயத்த பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கொடைக்கானல் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் மருத்துவர் திலீப் கூறியதாவது, “ஆனைமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் கொடைக்கானல் வன கோட்டத்திற்கு உட்பட்ட ஏழு வனசரகங்களிலும் 236 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்களில் குறிப்பாக புலி உள்ளிட்ட மாமிச உண்ணிகளின் நடமாட்டம் பற்றி கண்காணிக்கப்படும்.

ஏற்கனவே பேரிஜம், பூம்பாறை, மன்னவனூர், கொடைக்கானல், வந்தரவு, உள்ளிட்ட வன பகுதிகளில் புலிகள் நடமாட்டம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் பதிவாகும் காட்சிகளைக் கொண்டு எத்தனை புலிகள் மற்றும் மாமிச உண்ணிகள் இந்த பகுதிகளில் வாழ்கின்றன என்பது பற்றி துல்லிதமாக கணக்கெடுக்கப்படும்.

முதற்கட்ட வனவிலங்குகளின் கணக்கெடுப்பு பணி மற்றும் இரண்டாம் கட்டமாக கேமராக்கள் மூலம் பதிவாகும் காட்சிகளை கொண்டும், மொத்தமாக வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு பணி ஆய்வு செய்யப்பட்டு நிறைவடையும்” என்றார்.

வன விலங்குகள் கணக்கெடுப்புக்கு 236 சிசிடிவி பொருத்த வனத்துறை திட்டம்

இதையும் படிங்க: யானையின் உடலை துளைத்த குண்டு - வனத்துறையினரிடம் சிக்கிய வேட்டைக்காரர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.