ETV Bharat / state

நீடித்து வ‌ரும் ஊர‌ட‌ங்கால் ப‌ரித‌விக்கும் ப‌சுமை குடில் சாகுப‌டி

author img

By

Published : May 18, 2020, 12:33 PM IST

திண்டுக்கல்: காத‌லின் அடையாள‌மான‌ ரோஜாவை க‌ட‌ந்த‌ 5 வ‌ருட‌ங்க‌ளாக‌ பின்னுக்கு த‌ள்ளிய கார்னேஷ‌ன் ம‌ல‌ர்க‌ளை வாங்க‌க்கூட‌ ஆள் இல்லை என‌ விவசாயிகள் க‌வ‌லை தெரிவிக்கின்றனர்.

flower sale drop due to curfew
carnation flower

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சுற்றுலாத் தலங்களில் பிரபலமானது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக இங்குள்ள அனைத்து தொழில்களும் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

இதனால் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தொடர்ந்து செண்பகனூர், குண்டுபட்டி, கூக்கால், மன்னவனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பசுமை குடில்கள் அமைத்து கார்னேஷன் மலர்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த மலர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் காணப்படும் இந்த மலர்கள் அலங்காரத்திற்கும் பரிசு அளிப்பதற்கும் பயன்படுத்தபடுகிறது.

கடந்த ஐந்து வருடங்களாக ரோஜாவை பின்னுக்குத் தள்ளி அதிக அளவில் கார்னேஷன் மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது இந்த மலர்களை வாங்க ஆள் இல்லை என மலர் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்பாக பயிரிட்ட மலர் செடிகளும் எடுக்கப்படாமல் இருப்பதால் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவினால் இரண்டாம் கட்ட கார்னேஷன் மலர்கள் நடவு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஏற்றுமதி செய்யப்படாததால் வேருடன் பிடுங்கி எறியப்படும் 'பஜ்ஜி' மிளகாய்ச் செடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.