ETV Bharat / state

ஊரடங்கு காரணமாக சம்பங்கி பூ விலை பாதிப்பு - விவசாயிகள் வேதனை - The price of flowers is low

திண்டுக்கல்: ஊரடங்கு உத்தரவு காரணமாக சம்பங்கி பூக்களின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சம்பங்கி பூ
சம்பங்கி பூ
author img

By

Published : Jun 7, 2021, 6:31 AM IST

திண்டுக்கல்: சித்தையன்கோட்டை, நரசிங்கபுரம், ஆத்தூர், செம்பட்டி என பெரும்பான்மையானப் பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக, அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், பூச்சந்தை மூடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயி முனியாண்டி கூறுகையில், 'ஒரு ஏக்கருக்கு ரூபாய் 20 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்துள்ளோம். பூக்கள் நன்றாக பூக்கும் நேரத்தில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது' என்றார்.

கோயில் திருவிழா, திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறாததாலும், பூக்களை வாங்க ஆளில்லாததாலும், ஒரு கிலோ பூக்கள், 2 முதல் 4 ரூபாய்க்கு விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தங்களைப் போன்ற விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஊரடங்கில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.