பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் அடியனூத்து முகாம் மற்றும் பெனாஸ்ரம் டொர்னாடோ சாக்கர்ஸ் அணி இணைந்து ஈழத்தமிழர்களுக்கான மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டியை சிறுமலை அடிவாரத்தில் நடத்தியது. இதில் மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், வேலூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 30 அணிகள் பங்கேற்றன. கடந்த இரண்டு நாட்களாக இப்போட்டி இரவு, பகலாக மின்னொளியில் நடைபெற்றது.
நாக்-அவுட் முறையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதி போட்டியில் அடியனூத்து முகாம் அணி, மதுரை திருவாதவூர் முகாம் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அடியனூத்து முகாம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் திருவாதவூர் முகாம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இதையடுத்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அடியனூத்து முகாம் அணிக்கு திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க முதன்மை துணை தலைவர் அமர்நாத் வெற்றி கோப்பையும், 15 ஆயிரம் ரொக்க பணத்தையும் பரிசாக வழங்கினார். இரண்டாவது பரிசாக மதுரை முகாம் அணிக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கொல்கத்தா கால்பந்து மைதானத்தில் சிஏஏவுக்கு எதிராக வலுப்பெற்ற போராட்டம்