ETV Bharat / state

மாங்காய் குடோனில் தீ விபத்து: ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம் - fire accident in mango godown in dindigul

திண்டுக்கல்: நத்தம் அருகே கோபால்பட்டியில் உள்ள மாங்காய் குடோனில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கார் ஒன்றும் இரண்டு இருசக்கர வாகனங்களும் எரிந்து நாசமானது.

fire accident in mango godown in dindigul

author img

By

Published : Mar 31, 2020, 10:03 PM IST

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி பகுதியில் ஹரிஹரன் (49) என்பவருக்குச் சொந்தமான மாங்காய் குடோனும் அடைக்கப்பட்டு இருந்தது.

அவருக்கு சொந்தமான கார் ஒன்றையும், இரண்டு இருசக்கர வாகனங்களையும் குடோனுக்கு உள்ளே வைத்திருந்தார். அப்போது மாலை திடீரென குடோனிலிருந்து புகை கிளம்பியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

மாங்காய் குடோனில் தீ விபத்து

இருப்பினும் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்னே அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒன்றுசேர்ந்து தீயை அணைத்தனர். தீ பிடித்ததற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து இது குறித்து சாணார்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க... மைதா மாவு ஏற்றி வந்த லாரி எரிந்து சேதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.