திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சாணார்பட்டி அடுத்துள்ள கோணப்பட்டியில் கடந்த சில தினங்களாக புதுமுக நடிகர் நடித்துவரும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று நடந்தபோதும் கரோனா விதிமுறையை கடைப்பிடிக்கவில்லை என்று புகார் எழுந்தது.
அதைத்தொடர்ந்து அங்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், உதவி காவல் ஆய்வாளர் வாசு உள்ளிட்ட காவல் துறையினர் பார்த்தபோது, விதிமுறைகளை கடைபிடிக்காமல் பாடல் காட்சிகள், படப்பிடிப்பு செய்துகொண்டிருந்த படக்குழுவினருக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது.