திண்டுக்கல்: மலை வாழை பழத்தின் கொள்முதல் விலை அதிகரித்தால் மட்டுமே தொடந்து விவசாயம் செய்ய முடியும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானல் அருகே அடுக்கம் மலை கிராமத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இங்கு 500 ஏக்கர் பரப்பளவில் 200 விவசாயிகள் மலை வாழை விவசாயம் செய்கின்றனர்.
இங்கு விளைவிக்கப்படும் மலைவாழை சென்னை கோயம்பேடு சந்தைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது ஒரு வாழை பழம் 7 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விற்பதாக மலைவாழ் விவசாயிகள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.
தற்போது மலைவாழை விவசாயம் செய்ததில் கூலி ஆட்களுக்கு சம்பளம் தரும் அளவிற்கு கூட வருமானம் கிடைக்கவில்லை. கரோனா ஊரடங்குக்கு முன்பு ஒரு மலை வாழை 10 ரூபாய் முதல் 15 ரூபாய் விற்றது.
தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதாலும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்கள் சந்தை திறக்கப்படாத காரணத்தினாலும் மலைவாழை மிக குறைவாக விற்கப்படுகிறது என மலைவாழ் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேலும் இந்த இழப்பிற்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என மலைவாழ் விவசாயிகள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்முதல் விலை அதிகரித்தால் மட்டுமே தாங்கள் தொடர்ந்து மலை வாழை விவசாயம் செய்ய முடியும் என விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஒகேனக்கல், பிலிகுண்டுலு பகுதிகளில் ஐஏஎஸ் அலுவலர் ஆய்வு