திண்டுக்கல்: மலைப்பகுதிகளில் வேளாண்மை பிரதான தொழிலாக இருந்துவருகிறது. இதில் முக்கியப் பயிர்களான உருளைக் கிழங்கு, பீன்ஸ், கேரட், முட்டை கோஸ், அவரை, வெள்ளைப் பூண்டு உள்ளிட்டவை பயிரிடப்பட்டுவருகின்றன.
இவற்றின் ஊடுபயிராகவும், தனியாகவும் அவக்கோடா எனப்படும் பட்டர் ப்ரூட் பயிரிடப்பட்டுவருகிறது. இந்த வகைப் பழங்கள் செண்பகனூர், சீனிவாசபுரம், கார்மேல்புரம், பள்ளங்கி, வில்பட்டி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்பட்டுவருகின்றன.
ரூ.80 மட்டும் விலைபோகும் அவக்கோடா
மருத்துவ குணம் கொண்ட இப்பழங்கள், பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் தற்போது கரோனா தொற்று காரணமாக ஏற்றுமதி குறைந்துள்ளதால் விலையும் குறைந்துள்ளது.
இதனால் இதனை நம்பி வாழ்வாதாரத்தை நடத்திவரும் உழவர்கள், தங்களது வருவாயை இழந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
தற்போது அவக்கோடாவின் விலை குறைந்தபட்சமாக 80 ரூபாய் மட்டுமே போவதாகவும், இதனால் ஏற்றுமதிக்கான வசதிகளை அரசே நேரடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் உழவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த 'ஷாக்': இப்போது ஸ்டாலின் குட் புக்கில்...!