திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி நேற்று (ஆகஸ்ட் 7)மாலை பழனி வந்தடைந்தார். பழனி வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து இரவு பழனியில் தங்கிய எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலை ரோப்கார் மூலம் மலைமேல் சென்று, பழனி கோவிலில் நடைபெற்ற காலசந்தி பூஜையில் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தார்.
வேடர் அலங்காரத்தில் காட்சி தந்த முருகனை தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். எடப்பாடி பழனிச்சாமியுடன் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:ஓபிஎஸ் உதைத்தது அதிமுக அலுவலகத்தை அல்ல: தொண்டர்களின் நெஞ்சை.. ஈபிஎஸ் கடும் விமர்சனம்!