ETV Bharat / state

தீபாவளி: கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: தீபாவளி பண்டிகையால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது.

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

author img

By

Published : Nov 12, 2020, 5:47 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்களான பாயிண்ட், குணா குகை, தூண்பாறை, பைன் காடுகள் உள்ளிட்டவை உள்ளன.

நகர் பகுதியில் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, கோக்கர்ஸ்வாக் போன்ற இடங்கள் உள்ளன. ஏற்கனவே கரோனா ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது.

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

தற்போது கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்பு கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கினர். தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (நவ. 14) கொண்டாடப்படுகிறது.

இதனால் மீண்டும் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்தது. சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் பிரதான சாலைகளான ஏரிச்சாலை, கலையரங்கம், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை எதிரொலியால் சுற்றுலாப் பயணிகளை நம்பி சிறு கடை வைத்திருந்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: கூடுதல் பேருந்துகள் இயக்காததால் பொதுமக்கள் அவதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.