தமிழ்நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை பரவி நாள்தோறும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் - கரூர், பழனி, மதுரை, திருச்சி புறவழிச்சாலைகள் என 11 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் வாகனத் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி நகருக்குள் உள்ளே வரும் நபர்களைக் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் இ-பதிவு இல்லாமல் உள்ளே நுழையும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை காவல் துறையினர் அனுமதிப்பதில்லை. இ-பதிவு நடைமுறைக்கு வந்த கடந்த இரண்டு தினங்களில் தேவை இல்லாமல் சுற்றித் திரிந்த 600 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!