ETV Bharat / state

''போதைப்பொருட்களே சட்டம் ஒழுங்கு பிரச்னைக்குக் காரணம்'' - பாமக தலைவர் அன்புமணி! - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களே சட்டம் ஒழுங்கு பிரச்னைக்குக் காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ்

author img

By

Published : Apr 27, 2023, 7:58 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ்

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பின்னர் திண்டுக்கல் தனியார் மீட்டிங் ஹாலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் செய்தியாளர்களின் சந்திப்பு நடைபெற்றது. அதில் அளித்த பேட்டியில், ''கிராம நிர்வாக அலுவலர் கொலை அரங்கேறி உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு காரணம் மது தான். கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களுக்கு காரணம் கஞ்சா தான்.

கரோனாவுக்குப் பிறகு தான் கஞ்சா தற்போது உச்சகட்டமாக விற்பனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் எல்லைகளிலிருந்து கஞ்சா வரப் பெறுகிறது. கஞ்சா பவுடர், கஞ்சா எண்ணெய், கஞ்சா பேஸ்ட், கஞ்சா சாக்லேட், கஞ்சா ஸ்டாம்பு என கஞ்சாவில் பலவித வடிவங்களில் வெளிவருகின்றன. கஞ்சா மட்டும் அல்ல அபின், ஹாக்கின், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இலங்கை, ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பஞ்சாப் எல்லை, பர்மா வழியாக வந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் போதைப்பொருட்களை ஒழிக்க சிறப்புக் கவனம் எடுக்க வேண்டும். மாதந்தோறும் இது சம்பந்தமான மீட்டிங்குகள் வைக்க வேண்டும். போதைப்பொருள் தடுப்புச்சட்டத்தில் கடைசியாக உள்ளவர்களை மட்டுமே கைது செய்யப்போகிறார்கள் முக்கியமானவர்கள் கைது செய்யப்படுவதில்லை.

எல்லோருக்கும் அரசியல் பின்புலம் உள்ளது. பாலியல் சீற்றங்களுக்கு காலம் இந்தப் போதைகள் தான். இதை ஒழித்தால்தான் சீராக இருக்கும். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தான் கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியிடுவோம். திராவிடக் கட்சிகள் மொழி, மொழிப்போரை வைத்து தான் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், தற்போது எங்கும் மது, எதிலும் மது என தமிழ்நாட்டில் நிலை வருகிறது. வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக உடன் ஒருமித்த கருத்துள்ள கட்சி எல்லாம் இணைந்து கூட்டணி அமைப்போம். அதற்கான வியூகத்தை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடுப்போம்.

மக்கள் புதுமையும் மாற்றத்தையும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை பெறும் வகையில் எங்கள் செயல்திட்டம் இருக்கிறது. கொடநாடு கொலை வழக்கில் சிபிஐ வைத்தாலும் பரவாயில்லை. யார் கொலையாளி என உண்மை வெளிவர வேண்டும். மக்கள் வெளிப்படையாக தெரிந்து கொள்ள விசாரிக்கட்டும்” எனப் பேசினார்.

இதையும் படிங்க: ''நாச்சியப்பன் பாத்திரக்கடைல பார்த்ததா சொன்னாங்க..'' - போலிக் கோப்பையுடன் ஏமாற்றியவர் மீது வழக்குப்பதிவு

இதையும் படிங்க: 'காங்கிரஸ் குறித்து அவதூறு பரப்புகிறார்': அமித்ஷா மீது கர்நாடகாவில் போலீசில் புகார்

இதையும் படிங்க: சிவப்பு சேலை, குங்குமம் சகிதமாக 100 நாள் திட்டப்பணியாளர்களுடன் செல்ஃபி எடுத்த கனிமொழி எம்.பி.!

இதையும் படிங்க: வடமாநில கோயில்களுக்கு ஹெலிகாப்டர் சேவை எனக் கூறி மோசடி - பக்தர்களுக்கு எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.