திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேவுள்ள ஜவஹர் நகரில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சிக்கு பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது .
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று (ஜன.30) பழனி-தாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வந்த பழனி டவுன் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என பொதுமக்கள் கூறியதால் காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு மணி நேரம் போராட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த அலுவலர்கள் விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோயில் திருவிழா!