திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 'டாக் டே' புயல் காரணமாக நேற்று (மே.15) இரவு முதல் சாரல் மழை, அவ்வப்போது பெய்தது.
இதனால் கொடைக்கானல் நகர்ப் பகுதி மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததால், மலைக் கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில், பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வெங்கட்ராமன் முன்னிலையில், மீட்புக் கருவிகள் குறித்த ஆய்வு நடைபெற்றது.
அப்போது தீயணைப்புத்துறை அலுவலர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பலத்த காற்றுக்கு எட்டு வீடுகள் இடிந்து சேதம்!