திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள சீலப்பாடியான் களம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புக்காளை. இவருக்கும் இவரது அண்ணன் அய்யாமலை மகன் வீரமணி என்பவருக்கும் இடையே பல ஆண்டுகளாக சொத்துப் பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி வீரமணி தனது உறவினர் அன்பு சுந்தரத்துடன் சேர்ந்து வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த சுப்புகாளையை வெட்டிப் படுகொலை செய்தனர்.
இது தொடர்பாக வடமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மனோகரன் குற்றவாளிகள் இரண்டு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையுடன் தலா ரூ 10ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க:குடும்பத் தகராறு மகள்களை ஆற்றில் வீசிய தந்தை!