திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகர்பகுதி மட்டுமின்றி மேல்மலை, கீழ்மலை கிராமங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், பழனி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் குமார் தலைமையில் இன்று (நவ.16) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வாக்குச்சாவடி முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், எவ்வாறாக பணியாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில், ‘வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி அமைய பல்வேறு வேலைகள் செய்ய வேண்டும். கழக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் பிறந்த நாளன்று ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிட வேண்டும்.
கொடைக்கானலில் வன விலங்குகளான யானை , காட்டெருமை உள்ளிட்ட விலங்குகளால் மக்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகளும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் நகர் பகுதி, மேல்மலை, கீழ்மலை கிராமங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நாங்கள் கட்சி தொடங்கினால் திமுக தோல்வியைத் தழுவும் - அழகிரி ஆதரவாளர்