தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை இன்றுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
![kodaikanal](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-01-kodaikanal-dmk-rally-vs-spt-tn10030_04042021152905_0404f_1617530345_630.png)
இந்நிலையில் பழனி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில், திமுக வேட்பாளர் செந்தில் குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் கட்சியினர் பேரணியாக ஏரிசாலை, செவன்ரோடு, அண்ணாசாலை, கேசிஎஸ் திடல், முஞ்சிக்கல், ஆனந்தகிரி, அண்ணாநகர் வழியே கோஷங்களை எழுப்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இப்பரப்புரையில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மாநிலம் முழுவதும் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்