திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சமூக பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் தலைமை தாங்கினார்.
இதில் பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், உப்புப்பாறைமெத்து, அஞ்சுவீடு உள்ளிட்ட பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் பட்டா மாறுதல், சாலை வசதி, தண்ணீர் வசதி, தெரு விளக்குகள் உள்ளிட்டவை வேண்டி கோரிக்கைளை மக்கள் வைத்தனர். மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தனி வட்டாட்சியர் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் கடன் வழங்கும் சிறப்பு முகாம்!