ETV Bharat / state

ஷூட்டிங் ஸ்பாட்டில் மின்னல் தாக்குதல்.. லைட்மேன்கள் உயிர் தப்பிய சம்பவம் குறித்து சுசீந்திரன் உருக்கமான வீடியோ! - dindigul news

திண்டுக்கல் மாவட்டத்தில் 'மார்கழி திங்கள்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது பலத்த மழையின் காரணமாக லைட் செட் மீது மின்னல் தாக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக 5 லைட்மேன்கள் உயிர் தப்பினர் என இயக்குநர் சுசீந்திரன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மார்கழி திங்கள் படப்பிடிப்புத் தளத்தில் நிகழ்ந்த விபத்தைக் குறித்து இயக்குநர் சுசீந்திரனின் உருக்கமானப் பதிவு

author img

By

Published : May 31, 2023, 3:26 PM IST

லைட்மேன்கள் உயிர் தப்பிய சம்பவம் குறித்து சுசீந்திரன் உருக்கமான வீடியோ!

திண்டுக்கல்: பாரதிராஜா இயக்கிய 'தாஜ்மஹால்' படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானவர் பாரதிராஜாவின் மகன் மனோஜ். மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின், எந்திரன் படத்தில் நடிகர் ரஜினிக்கு டூப்பாக நடித்தார். தற்போது வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘மார்கழி திங்கள்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில், மனோஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் ’மார்கழி திங்கள்’. பாரதி ராஜா முதன்மை கதாப்பாத்திரத்திலும், அப்புக் குட்டி, ரக்ஷனா மற்றும் பலர் நடித்து வரும் இந்தப் படத்தின் படப் பிடிப்பு திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கணக்கம்பட்டி பகுதியில் நடைபெற்று வந்தது.

இந்த படப் பிடிப்பிற்காக சென்னையில் இருந்து பிரம்மாண்ட கோடார் (codar) லைட்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன. இயற்கை சூழலில் மக்காச் சோளம் விவசாயத்தின் மத்தியில் படப் பிடிப்பானது நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சூறைக்காற்றுடன் சேர்ந்து இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யத் துவங்கி உள்ளது.

இந்த நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் அமைக்கப்பட்டு உள்ள லைட் செட் மீது மின்னல் தாக்கியது. இதனால் லைட் செட்கள் கீழே விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக ஐந்து லைட் மேன்கள் உயிர் தப்பி உள்ளனர். இந்த சம்பவத்தை குறித்து இயக்குநர் சுசீந்திரன் உருக்கமான தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் மின்னல் தாக்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மக்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் பழக்கம் குறைந்து வருகிறது: நடிகஅசோக் செல்வன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.