திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர் சோனா சுருளி என்பவர், மாவட்டம் முழுவதும் 15-க்கும் மேற்பட்டவர்களிடம் கூட்டுறவுத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 5 முதல் ரூ.10 லட்சம் வரை பெற்றுள்ளார். அந்த வகையில் சுமார் ரூ.1 கோடி வரை பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பணம் கொடுத்தவர்கள் வேலை வாங்கித் தராமல் தங்களை சுருளி ஏமாற்றி விட்டதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் நேற்று (ஆகஸ்ட் 13) புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து இன்று (ஆக.13) சோனா சுருளியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: யூடியூப் பார்த்து கொள்ளையடித்த பட்டதாரி காதல் ஜோடி கைது