ETV Bharat / state

விடிந்தும் அணைக்க முடியாத தீ! திண்டுக்கல் ஜவுளிக்கடை பரிதாபம் - விடிந்தும் அணைக்க முடியாத தீ

நத்தம் அருகே கோபால்பட்டியில் ஜவுளி, பர்னிச்சர் கடையில் தீ விபத்து ஏற்பட்டு மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம் அடைந்தன.

விடிந்தும் அணைக்க முடியாத தீ! ; திண்டுக்கல் ஜவுளிக்கடை பரிதாபம்

author img

By

Published : Feb 4, 2022, 2:20 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டியில் சந்திரசேகருக்குச் சொந்தமான விஷ்ணு தேவி டெக்ஸ்டைல்ஸ், பாத்திரம், பர்னிச்சர் கடை உள்ளது. இரண்டு மாடிக் கட்டடத்தில் செயல்பட்டுவருகிறது.

இந்தக் கடையில் நேற்று இரவு ஒரு மணி அளவில் தீப்பற்றிப் புகை வெளிப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நத்தம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சி செய்யப்பட்டுவந்த நிலையில் கட்டுக்கடங்காத தீ மேலும் பரவத் தொடங்கியதை அடுத்து திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு திண்டுக்கல் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

விடிந்தும் தீயை அணைக்க முடியாமல் திணறல்!

விடிந்தும் அணைக்க முடியாத தீ! திண்டுக்கல் ஜவுளிக்கடை பரிதாபம்

சுமார் 7 மணி நேரத்துக்கு மேலாகத் தீயணைக்கும் பணியில் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இத்தீவிபத்தால் சுமார் 3 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

இந்தத் தீ விபத்து குறித்து சாணார்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். சுமார் 7 மணி நேரத்துக்கு மேலாகத் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.

இதையும் படிங்க: இறந்தவர் பட்டியலில் அதிமுக வேட்பாளரின் பெயர்: நாகையில் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.